27 January 2026

அறுவடை காலம் நெருங்கியாச்சு

நிஜீ.கீதங்கள்:1319

To Download Txt Lyrics file

 

                   அறுவடை காலம் நெருங்கியாச்சு

                        ஆத்தும அறுவடை மிகுதியாச்சு

                        அறுவடையின் தேவனை நோக்குவோம்

                        அறுவடைக்கு ஆயத்தமாகுவோம்

 

1.         திறப்பின் வாசலிலே

            தினமும் நின்றிடுவோம்

            அழிகின்ற மக்களுக்காய்

            அன்றாடம் ஜெபித்திடுவோம்

 

2.         இருளில் வாழும் ஜனங்கள்

            இரட்சிப்பை பெற வேண்டும்

            இயேசு ஆண்டவர் என்று

            நாவுகள் அறிக்கை செய்யணும்

 

3.         உம் இராஜ்ஜியம் வரணும்

            உம் சித்தம் நிறைவேறணும்

            வசனமெல்லாம் பரவ வேண்டும்

            அனைவரும் கேட்க வேண்டும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...