22 January 2026

அருகில் நின்ற அன்னையாரை

கீ.கை:195

To Download Txt Lyrics file

 

195. இராகம்: சலநாட்டை.                                                            தாளம்: திர்புடை.

 

                             மூன்றாம் திருமொழி

 

          “அப்பொழுது இயேசு தம்முடை தாயையும் அருகே நின்ற தமக்கு, அன்பாயிருந்த சீஷனையுங்கண்டு, தம்முடைய தாயை நோக்கி, ஸ்திரியே அதோ உன் மகன் என்றார்.  பின்பு அந்தச் சீஷனை நோக்கி, அதோ உன் தாய் என்றார்” யோவா.19:26-27.

 

                             “உருகாதோ நெஞ்சமே” என்ற மெட்டு

 

1.       அருகில் நின்ற அன்னையாரை

          ஆவலாய் ஒப்புவித்தார்

            அருமையுள்ள சீடன் யோவான்

            அன்பாய்ப் பாது காக்கவே.

 

2.         தாய் தந்தையை ஆயுள் மட்டும்

            நேயமுடன் பாதுகாக்கச்

            சேயருக்குக் கற்பித்தவர்

            செய்து தாமே காட்டினார்.

 

3.         சாக்குப் போக்குச் சொல்லிடாமல்

            வாக்குடன் கற்பனையைத்

            தீர்க்கமாய்க் கைக்கொள்ளுவோர்கள்

            தீர்க்காயுசும் பெறுவார்.

 

 

- மறைத்திரு. I.J. ஐயாத்துரை, ஆள்வானேரி.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...