26 January 2026

அவனியில் எழும்பிடும் அவலக் குரல்

நிஜீ.கீதங்கள்:2265

To Download Txt Lyrics file

 

          அவனியில் எழும்பிடும் அவலக் குரல்

            திக்கெங்கும் ஒலித்திடும் ஏக்க குரல்

            இளைய சமுதாயமே இன்றே கேட்டிடுவாய்

 

                        திறப்பினில் நின்றிட நீ தேவை

                        சுவரை அடைப்பது மாபெரும் தேவை

                        தேசத்தின் அழிவினை தடுத்திடும்

                        ஜாமக்காரர்கள் இன்றைய தேவை

 

1.         இயேசுவைக் காண விரும்புகிறோம்

            என ஏங்கும் மக்களை சந்திக்க வா

            வாழ்வழிக்கும் சிலுவை சுப செய்தி

            செல்லாத இடங்களில் சொல்லிட வா

 

2.         அழிந்திடும் ஆத்துமா பல கோடி

            தேடுதே அவர் உள்ளம் உன்னை நாடி

            சிதறுண்ட ஜனங்களை சேர்த்திடவே

            இயேசுவின் அணியில் நீ இணைந்திட வா

 

3.         யாரை நான் இன்று அனுப்பிடுவேன்

            யார் என் காரியமாய் போவாரென

            ஏங்குகிறார் வருந்தி அழைக்கின்றார்

            நேசரின் தாகம் நீ தீர்த்திட வா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...