27 January 2026

அற்புத தேவன் நீரே ஆதி அந்தமும் நீரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அற்புத தேவனின் செய்கைகள் யாவும்

                        அற்புதமே என்றும் அற்புதமே - 2

                        தேவனின் அற்புதம் உந்தனில் மலர

                        தேவனின் பாதம் சரணடைவாய் - 2

 

1.         எகிப்தின் பாரம் விலகிடுதே

            இருளும் நீங்கி ஒளி பெறுதே - 2

            அகத்தினில் மறைந்திடும் பாவங்கள் நீக்கி

            இயேசுவின் ஒளியும் தோன்றிடுதே - 2 - அற்புத

 

2.         சிவந்த கடலும் வழிவிடுமே

            தடையாம் எரிகோ அகன்றிடுமே - 2

            கர்த்தரின் வார்த்தையின் வல்லமையாலே

            அற்புதம் உந்தனில் வெளிப்படுமே - 2 - அற்புத

 

3.         வறண்ட தாகம் தீர்த்திடவே

            ஓங்கிய புயத்தை நீட்டினாரே

            கன்மலை திறந்து தாகமே தீர்த்திடுவார்

            எந்தனின் தாகத்தை தீர்த்திடுவார் - 2 - அற்புத

 

4.         குருடர் செவிடர் முடவருக்கும்

            சுகமே இயேசு அளித்தனரே - 2

            இயேசுவின் நாமம் ஒளஷதமாகும்

            அற்புத சுகமே அடைந்திடுவாய் - 2 - அற்புத

 

5.         சீறும் கடலை அமர்த்தினாரே

            சீடரின் பயத்தை அகற்றினாரே - 2

            உந்தனின் பயங்கள் யாவையும் நீக்கி

            அற்புதர் ஜெயமாய் நடத்திடுவார் - 2 - அற்புத

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...