23 January 2026

அல்பா ஒமேகா ஆதி அந்தமே

நிஜீ.கீதங்கள்:129

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அல்பா ஒமேகா ஆதி அந்தமே

            ஆண்டவர் இயேசு உயர்ந்தவரே

 

                        அகிலம் படைத்தவர் நீரே

                        அடியார் உம்மை தொழுகின்றோம் - 2

 

1.         அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி

            ஜெயங் கொண்டவர் இயேசு நீரே

            முத்திரை உடைக்க பாத்திரரே

            புஸ்தகம் திறக்கும் வேந்தன் நீரே - அல்பா

 

2.         யேகோவா நிசி வெற்றி கொடி

            யேகோவா ரப்பா பரிகாரி

            சுற்றிலும் சூழ்ந்து இருப்பவரே

            துதிகள் சொல்லி தொழுகின்றோம் - அல்பா

 

3.         யேகோவாயீரே போதும் நீரே

            யேகோவா ஷாலோம் சமாதானம்

            பரிசுத்த தொழுகை அலங்காரம்

            பயத்துடன் உம்மை பணிகின்றோம் - அல்பா

 

4.         உயிர்த்தெழுந்த தேவன் நீரே

            மரணத்தை வென்று எழுந்தவரே

            மூப்பர்கள் ஜீவன்கள் சாஷ்டாங்கம்

            மகிமை கனத்தை செலுத்துகின்றோம் - அல்பா

 

5.         விடிவெள்ளியே சிறந்தவரே

            பேரொளியே உயர்ந்தவரே

            பரிசுத்த தெய்வம் நீர் தானே

            பாத்திரர் உம்மை தொழுகின்றோம் - அல்பா

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...