28 January 2026

அற்புதரே அற்புதரே உம்மை

நிஜீ.கீதங்கள்:2355

To Download Txt Lyrics file

 

                   அற்புதரே அற்புதரே உம்மை

                        ஆராதனை செய்கிறேன்

                        அதிசயங்களை காண செய்தீரே

                        ஆர்ப்பரித்து என்றும் மகிழ்வேன்

 

1.         கோடான கோடி ஸ்தோத்திரங்கள்

            கோலும் தடியும் தேற்றியதால்

            கோத்திரங்கள் உம்மை பாடட்டும்

            கோஷத்துடனே முன் செல்லட்டும்

 

2.         தூயாதி தூயனை துதித்திடுவேன்

            துயரங்களை அவர் நீக்கினதால்

            துரிதமாய் நான் செயல்படுவேன்

            துளிர்க்கும் ஆசீர் கண்டிடுவேன்

 

3.         மன்னாதி மன்னனை சந்திப்பேன்

            மணவாட்டி ஸ்தானத்தில் நின்று நான்

            மத்திய வானில் மகிழ்ச்சியுடன்

            மங்களம் பாடி ஆடிடுவேன் - அற்புதரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...