22 January 2026

ஜெயித்திடும் இயேசு சேனை வீரர்

ஜெயித்திடும் இயேசு சேனை வீரர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெயித்திடும் இயேசு சேனை வீரர்

          என்றும் வெற்றி அளித்திடுவார்

            இயேசுவுக்குள் வாழும் யாவருக்கும்

            என்றும் வெற்றி அளித்திடுவார்

 

                        வெற்றி வெற்றி என்றும் ஆர்ப்பரிப்போமே

                        அல்லேலூயா என்றும் வெற்றியே

 

1.         ஆவியின் பட்டயத்தால்

            அழித்திடுவோம் அனைத்தையுமே

            அச்சமில்லை தோல்வியில்லை

            என்றும் வெற்றி உண்டே

 

2.         ஆவியின் பெலத்தினால்

            அரண்களை அழித்திடுவோம்

            தேவ மக்கள் யாவருக்கும்

            என்றும் வெற்றி உண்டே

 

3.         சிங்கம் போல சத்துரு

            சீறியே வந்திடினும்

            இயேசுவின் நாமத்திலே

            என்றும் வெற்றி உண்டே

 

4.         தேவனையே சார்ந்திடுவோர்

            பயப்படத் தேவையில்லை

            இயேசுவின் ரத்தத்திலே

            என்றும் வெற்றி உண்டே

 

5.         ஆயிரம் பேர் எதிர்த்தாலும்

            ஆண்டவரே அழித்திடுவார்

            இயேசுவின் சேனையிலே

            என்றும் வெற்றி உண்டே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...