28 January 2026

அனுதினமும் அனுதினமும் அகமகிழ்ந்தே

பாடல்

To Download Txt Lyrics file

 

                   அனுதினமும் அனுதினமும்

                        அகமகிழ்ந்தே அகமகிழ்ந்தே

                        என் தேவனில் களிகூர்ந்து  

                        அழகழகாய் அழகழகாய் 

                        அவர் புகழை அவர் புகழை

                        எந்நேரம் ஏற்றிடுவேனே  

 

1.         மாறாதென்றும் உம் நாமம்

            மங்காத புகழுள்ள நாமம்   

            உம் நாமம் நான் சொல்லும் இடத்தில்

            வந்தெம்மை ஆசீர்வதிப்பீர்  

 

2.         உம் வல்ல நாமம் அறிந்து   

            அனுதினமும் அதை தியானம் செய்ய   

            உம் ஞாபக புஸ்தகத்தில் 

            என் பேரை இடம் பெற செய்தீர்  

 

3.         புது வானம் புது பூமி படைத்து    

            எம்மையும் களிகூரச்செய்வீர்    

            வேகமாய் நிறைவேற்றும் தேவா 

            ஒமேகா என்றென்றும் வாழ்க

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...