சரணங்கள்
1. அற்புத அன்பிதே
பொற் பரனேசுவே
பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே - உம்மைப்
போற்றி ஏற்றி புகழ்ந்திடவே - துதி
சாற்றி யூற்றி யுள்ளம் மகிழ்வேன்
பல்லவி
அன்பு பெருகும் சுனை நீரல்லவோ
அம்புவி தனில் அரசே
மாறா நின் தயவும் மா நேசமதும்
மறப்பேனோ! மறப்பேனோ!
2. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் மீதே
நடந்து சீஷரைத் தேற்றிய இயேசுவே - எந்தன்
நாவாய்ப் பொங்கும் அலை கடந்தே - கரை
நாடி சேரத் துணை புரிவீர் - அன்பு
3. மெல்கிசேதேக்கினைப் போன்ற குமாரனே
நல்குவீர் தாழ்மையே நின் சித்தம் செய்யவே
- தாரும்
தூய ஆவி அனுக்கிரகமே - இன்று
மீயுமென்னில் புது பெலனே - அன்பு
4. ஒளியில் இலங்கும் சுத்தர்களுடனே
எளியோன் எனக்கோர் பங்களித்தவரே - பரி
சுத்தஞ் செய்யப்பட்டோருடனே - நற்
சுதந்திரம் நான் பெறச் செய்யுமே - அன்பு
5. சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமே
சிந்திக்க ஆனந்த கண்ணீர் பெருகுதே - அதை
எண்ணியெண்ணி நிறைந்தன்பினால் - இன்னும்
எண்ணமில்லாத் துதி சொல்லுவேன் - அன்பு
No comments:
Post a Comment