அற்புதங்கள்
செய்பவர் இன்றும் வாழ்கிறார்
அதிசயங்கள் செய்பவர் நமக்குள்
வாழ்கிறார்
என்றும் வாழ்கிறார் துதித்துப்
பாடிடுவோம்
புகழ்ந்து நாம் போற்றிடுவோம்
1. கலங்காதே என் மகனே
நீ சோர்ந்திடாதே என் மகளே - 2
கன்மலையைப் பிளந்து தண்ணீரைத் தந்தவர்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார் - 2
2. நீ விசுவாசித்தால்
தேவ மகிமையை கண்டிடலாம்
மாராவின் தண்ணீரைத் தேனாக மாற்றினவர்
உன் வாழ்வை வளமாக்குவார் - 2
3. நீ போகும் பாதையிலே
வனாந்தரம் வந்தாலும்
ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன்
நீரூற்றை உனக்கருள்வார் - 2
No comments:
Post a Comment