28 January 2026

அற்புதம் பாவிநான் மீட்கப்பட்டேன்

ஞா.கீ:435

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

435. இராகம்: ஆபோகி                                             ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          அற்புதம்! பாவிநான் மீட்கப்பட்டேன்.

 

                             அனுபல்லவி

 

          சற்றாகிலும் கிருபை பெற;

            முற்றும் பாத்திரனானபோதும் - அற்

 

                             சரணங்கள்

 

1.         உலகத்தின் சிற்றின்பக் காதல்களும்,

            பலவித மாமிச இச்சைகளும்,

            பாவி என்னிதயத்தை வதைத்த போது

            பாவ விமோசனர் கிருபை கூர்ந்தார். - அற்

 

2.         மாய்மால வேஷத்தைத் தரித்துக் கொண்டு,

            வாய்ச் சொல்லால் மாத்திரம் சேவை செய்தேன்;

            நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்,

            மீண்டு மோஷம்போகக் காத்திருந்தேன். - அற்

 

3.         நான் செய்த தீவினை யுணர்ந்து, எந்தன்

            பெத்தலை பதியண்டை யோடிவந்து,

            மெய் மனஸ்தாபத்தின் அழுகையுடன்

            “ஐயனே! இரட்சியும்” என்றவுடன் - அற்

 

4.         இந்த மா ரட்சிப்பை நம்பாயோ நீ?

            வந்து பார்; மீட்பரின் சிலுவையண்டை

            ஓடுகின்ற இந்த சிவந்த நதி

            தேடி வருவோர்க்கு உயிரைத் தரும். - அற்

 

 

- இரட்சணியசேனைப் பாடல்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...