ஜெப வாழ்வில்
திருப்தியடைந்து நின்று விடாதே
உலகம் காட்டும் மாயையிலே விழுந்து விடாதே
- 2
ஓடு, ஓடு, ஓடு, ஓடு வாலிபனே
ஓடு, ஓடு, ஓடு, ஓடு கன்னிகையே
1. லோத்தின் மனைவி போல நீயும் பின்னால் பாராதே
லோகமான மாயையிலே
மயங்கி நில்லாதே - 2
வாலிப நாட்களில் தேவனைத் தேடு
வாஞ்சையாய் வாழ்க்கையை அவரிடம் கொடு -
2 - ஓடு, ஓடு
2. சிம்சோன் போல் உன் வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே
சின்ன சின்ன ஆசையிலே
விழுந்து விடாதே - 2
சிறியவனை உயர்த்திடும் பெரியவரிடம் வா
சிறுமைப்பட்ட உன் வாழ்வை அவரிடம் தா -
2 - ஓடு, ஓடு
3. உலகின் மீதும் மனிதர் மீதும் அன்பு கூராதே
அது உனக்கெதிராய் மாறிவிடும் மறந்து போகாதே
- 2
மாயையை நீக்கியே மன்னவரிடம் வா
மன்னிப்பதில்
வள்ளல் அவர் மனம்
திரும்பி வா - 2 - ஓடு, ஓடு
No comments:
Post a Comment