22 January 2026

அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே

நிஜீ.கீதங்கள்:1463

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அரியணையில் வீற்றிருப்பவரே

          உமக்கே ஆராதனை

            ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை

 

                        உமக்கே ஆராதனை - 4

 

1.         அடைக்கலமானவரே

            படைகளின் ஆண்டவரே

            இடுக்கண் வேளையிலே

            ஏற்ற துணை நீரே - உமக்கே

 

2.         பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்

            பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்

            தீமை அணுகாமல் காத்து

            சேர்த்திடுவீர் பரலோகம்

 

3.         எரிகின்ற அக்கினிச் சூளை

            எதுவும் என்னைத் தொடுவதில்லை

            ஆராதிக்கும் எங்கள் தெய்வம்

            எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள்

 

4.         நீர் செய்ய நினைத்ததெல்லாம்

            தடைபடாது என்றறிவேன்

            சகலத்தையும் செய்ய வல்லவர்

            அனைத்தையும் செய்து முடிப்பவர்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...