10 December 2025

வறியவனைத் தரையிலிருந்து தூக்கி விடுகிறார்

வறியவனைத் தரையிலிருந்து தூக்கி விடுகிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வறியவனைத் தரையிலிருந்து தூக்கி விடுகிறார்

          ஏழைகளை குப்பையிலிருந்து கை தூக்குகிறார்

 

                        மலடியை மக்களுக்கு தாயாக்குகிறார்

                        மகிழ்ச்சியுடன் வீட்டினிலே விளங்கச் செய்கின்றார் - 2

 

                        நம் தேவன் வல்லவரே

                        நம் தேவன் ஜீவிக்கின்றாரே - 2

 

1.         ஆடுகளை மேய்த்து வந்த சிறுவன் தாவீதை

            எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தவரே - 2

            இஸ்ரயேலின் அரசனாய் அரியணை ஏற்றி - (2)

            உமது புகழை தலைமுறைக்கும் விளங்கச் செய்தீரே - (2) - நம் தேவன்

 

2.         தாழ்நிலையில் நின்ற அடிமையை கடைக்கண் நோக்கினார்

            எல்லாத் தலைமுறைகளும் என்னைப் போற்றச் செய்தார் - 2

            வல்லமை மிக்கவர் அரும் பெரும் செயல் பல புரிந்தார் - (2)

            அவர் கிருபை தலைமுறைக்கும் உள்ளதாமே - (2) - நம் தேவன்

 

3.         நெஞ்சிலே செறுக்குற்றோரை சிதறடித்தாரே

            தாழ்ந்தோரை அரியணையில் உயரச் செய்தாரே - 2

            பசித்தோரை நலன்களால் வாழ வைத்தாரே - (2)

            அவர் கிருபை தலைமுறைக்கும் உள்ளதாமே - (2) - நம் தேவன்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...