10 December 2025

வற்றாத நீரூற்று போலிருப்பாய்

வற்றாத நீரூற்று போலிருப்பாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வற்றாத நீரூற்று போலிருப்பாய்

                        வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் - 2

                        கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்

                        காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் - 2

 

1.         வாய்க்கால்கள் ஓரம்

            நடப்பட்ட மரமாய்

            எப்போதும் கனி கொடுப்பாய்

            தப்பாமல் கனி கொடுப்பாய் - 2 - நீ வற்றாத

 

2.         ஓடும் நதி நீ

            பாயும் இடத்தில்

            உயிரெல்லாம் பிழைத்திடுமே

            சுகமாக வாழ்ந்திடுமே - 2 - நீ வற்றாத

 

3.         பலநாட்டு மக்கள்

            உன் நிழல் கண்டு

            ஓடி வருவார்கள்

            பாடி மகிழ்வார்கள் - 2 - நீ வற்றாத

 

4.         பஞ்ச காலத்தில்

            உன் ஆத்துமாவை

            திருப்தியாக்கிடுவார்

            தினமும் நடத்திடுவார் - 2 - நீ வற்றாத

 

5.         கோடைக் காலத்தில்

            வறட்சிக் காலத்தில்

            அச்சமின்றி இருப்பாய் - நீ

            ஆறுதலாய் இருப்பாய் - 2 - நீ வற்றாத

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...