வழுவாது
காத்திட்ட வல்லவரே
வலக்கரம் பிடித்திட்ட
நல்லவரே - 2
நேசத்தை பொழிந்திடும் நேசரே
நடனத்துடன் ஆடிப் பாடித் துதிப்பேன் -
(2)
ஆ... ஆ... ஆனந்த நடனத்துடன்
ஆடிப்பாடி என்றும் துதித்திடுவேன்
- 2
2. கால்கள் சறுக்கிட்ட
வேளையிலே
உம் கிருபையல்லோ
தாங்கியது
யோர்தானின் வெள்ள நேரத்திலே
உம் புயமல்லோ
நடத்தியது - (2) - ஆ... ஆ...
3. நிந்தை அவமான சூழ்நிலையில்
தேற்றியே காத்தீரே என் நேசரே
பாதாள இச்சைகள்
மோதிடினும்
தோல்விக்கு இடமே கொடுக்கவில்லை - (2)
- ஆ... ஆ... ஆனந்த
4. உலகத்தின் ஓட்டம் முடித்த பின்பு
ஒளிமய தேசத்தை சுதந்தரிப்பேன்
ஆயிரம் ஆயிரம் தூதருடன்
ஓய்வின்றி ஆடிப் பாடித் துதிப்பேன் -
(2) - ஆ... ஆ... ஆனந்த
No comments:
Post a Comment