10 December 2025

வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

            அவரையே நம்பியிரு - 2

            காரியத்தை வாய்க்கச் செய்வார்

            உன் சார்பில் செயலாற்றுவார் - 2

 

                        காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பி இரு

                        காரியத்தை வாய்க்க செய்வார்

                        உன் சார்பில் செயலாற்றுவார் - 2

 

1.         தீயவன் செயல் குறித்து மனம் பதறாதே - (2)

            புல்லைப் போல் உலர்ந்து பூவைப் போல் உதிர்ந்து

            இல்லாமல் போய்விடும் - 2 - காத்திரு

 

2.         மகிழ்ந்து களிகூரு தொடர்ந்து துதி பாடு - (2)

            உன் இதயத்தின் வாஞ்சை விருப்பங்கள் எல்லாம்

            விரைவில் நிறைவேற்றுவார் - 2 - காத்திரு

 

3.         நீதிமான் அனைவருக்கும் வெற்றி உண்டு வெகு விரைவில் - (2)

            துணை நின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்

            துரிதமாய் ஜெயம் தருவார் - 2 - காத்திரு

 

4.         உனது நேர்மையெல்லாம் அதிகாலை வெளிச்சமாகும் - (2)

            நண்பகல் போலாகும் உன் நீதி நியாயம்

            நண்பா கலங்காதே - 2 - காத்திரு

 

5.         கோபத்தை விட்டுவிடு சினம் நீ கொள்ளாதே - (2)

            பொறாமை எரிச்சல் ஒரு போதும் வேண்டாம்

            அது தீமைக்கு வழி நடத்தும் - 2 - காத்திரு

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...