09 December 2025

வானத்துல ஒரு நட்சத்திரம்

வானத்துல ஒரு நட்சத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            வானத்துல ஒரு நட்சத்திரம்

            ஜொலிக்குதே வழி திறக்குதே

            நட்ட நடு சாமத்திலே பிறக்குதே

            ஒளி பிறக்குதே

 

                        வாருங்க வானத்து சொந்தங்களே

                        இந்த அதிசயத்தை பாருங்களே - (2)

                        பச்ச கொழந்தையாக தெய்வமே

                        வந்து பொறந்திருப்பத பாடுங்களே - (2) - வானத்துல

 

1.         கண்மணியே கண்ணாளனே

            பேரழகே பெட்டகமே

            பொன்னாரமே பூவாரமே

            சிங்காரமே செந்தூரமே - 2

 

            சத்திரத்தில் சித்திரமே

            சாய்ந்தாட வந்தாயோ - (2)

            சத்தியமே சந்திரனே

            சந்தோஷமே தந்தாயோ - (2)

 

            வாக்கு மனிதராக

            நம்மோடு குடிகொள்ள - 2

 

                        இம்மானுவேலாக இம்மானுவேலாக

                        இம்மானுவேலாக இம்மானுவேலாக - வானத்துல

 

2.         மார்கழியின் குளிரினிலே

            மாமரியின் மடியினிலே

            பால் வடியும் பூமுகமே

            பாலகனே தாலேலோ - 2

 

            முத்தழகே முத்தமிழே

            மூலவனே காவலனே - (2)

            முத்துமணி ரத்தினமே

            மூவுலக அதிசயமே - (2)

 

            காலம் நிறைவேறவே

            கடவுள் தேடி வந்தாரே - 2

 

            ஆராதிப்போமே ஆராதிப்போமே - அவரை

            ஆராதிப்போமே நாம் ஆராதிப்போமே - வானத்துல

 

 

- Fr. G.V. Panneer Selvam

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அனுப்பும் தேவா உம் ஆசியோடு

பாடல் Youtube Link   Text file Download       அனுப்பும் தேவா உம் ஆசியோடு ஆசியோடு அகிலம் எங்கும் உம் பெ...