09 December 2025

வல்லமை தேவன் நன்மைகள்

வல்லமை தேவன் நன்மைகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வல்லமை தேவன் நன்மைகள்

            செய்தார் ஸ்தோத்தரி

            வாக்குகள் மாறா கிருபைகள்

            தந்தார் ஸ்தோத்தரி

 

                        ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரி

                        ஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரி

                        அல்லேலூயா (5) அல்லேலூயா - 2

 

1.         வறண்ட பாதையில்

            வழியை காட்டினார் ஸ்தோத்தரி

            வாதை நேரத்தில்

            வைத்தியர் ஆனார் ஸ்தோத்தரி

 

2.         துன்பத்தின் நடுவில்

            இன்பமாகினார் ஸ்தோத்தரி

            துயரத்தின் வேளைியல்

            ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி

 

3.         தாழ்மையில் நம்மை தயவாய்

            நினைத்தார் ஸ்தோத்தரி

            கண்ணீர் யாவையும் கனிவாய்

            துடைத்தார் ஸ்தோத்தரி

 

4.         கூப்பிடும் வேளையில்

            செவி கொடுத்தாரே ஸ்தோத்தரி

            ஆபத்து காலத்தில்

            அடைக்கலமானார் ஸ்தோத்தரி

 

5.         பாவங்கள் நோய்களை

            சிலுவையில் சுமந்தார் ஸ்தோத்தரி

            பரிசுத்த வாழ்வை

            நமக்களித்தாரே ஸ்தோத்தரி

 

6.         நித்திய ஜீவனை

            வாக்களித்தாரே ஸ்தோத்தரி

            நித்தமும் அவரது கிருபையை

            எண்ணி ஸ்தோத்தரி

 

 

- R. Vincent Sekar

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...