உன்னதமானவர் தாழ்மையின் ரூபமாய்
பிறந்தார்
உலகில் மனிதனாய் - 2
பிறந்தார் இயேசு இரட்சகராய்
பிறந்தார் இயேசு நம் உள்ளத்தில் - 2
ஓகோ, கோ - உன்னதமானவர்
1. பரலோக ராஜன்
மகிமையை துறந்து
ஏழையின்
கோலமாய் பூவில் வந்தார் - 2
மாளிகையை
அவர் தேடவில்லை
மாட்டுக்
கொட்டிலை தெரிந்தெடுத்தார் - 2 - பிறந்தார்
2. தமக்கு
சொந்தமானதில் வந்தார்
சொந்தமானோர் ஏற்றுக் கொள்ளவில்லை - 2
தலை சாய்க்க
இடம் இல்லை என்றவர்
சிலுவை
மரத்திலே தலை சாய்த்தார் - 2 - பிறந்தார்
- Vanitha Rajendran
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment