வல்லமமையின்
ஆவியானவர்
என்னுள்
வந்துவிட்டகாரணத்தினால்
பொல்லாத
சாத்தானை - ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
1. பவர் ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின்
ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன்
கசப்புகளை
2. கட்டுப்பாட்டின்
ஆவியானவர் - என்னை
கண்ட்ரோல் பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர்
சித்தம் செய்து வாழ்பவன் நான்
3. கிறிஸ்துவுக்குள்
நறுமணம் நான்
தெருத்
தெருவா மணம் வீசுவேன்
மீட்புபெறும் அனைவருக்கும் - நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்
4. உலகத்திற்கு
வெளிச்சம் நான்
இந்த
ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் - நான்
எப்போதும்
சுவை தருவேன்
5. கர்த்தரின்
முத்திரை என் மேல் - நான்
முற்றிலும்
அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர் - நான்
நிச்சயமாய்
மீட்பு பெறுவேன்
6. தேவனாலே
பிறந்தவன் நான்
எந்த
பாவமும் செய்வதில்லை
கர்த்தரே
பாதுகாக்கிறார்
தீயோன்
என்னை தீண்டுவதில்லை
7. கடவுள்
எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற
வல்லவரென்று
நிச்சயமாய்
நம்பினதாலே - நான்
நம்பிக்கையில்
வல்லவனானேன்
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment