09 December 2025

வல்ல தேவனை இன்றே

வல்ல தேவனை இன்றே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வல்ல தேவனை இன்றே

                   துதி சாற்றியே ஸ்தோத்தரிப்போம் - 2

                        மாறாத இயேசுவின் கிருபையில்

                        என்றும் வளர்ந்திடுவோம் - 2 - வல்ல

 

1.         பாவங்களில் உழன்றிருந்த

            நம்மை இயேசு உயர்த்திடவே - 2

            கிருபையின் விடுதலை

            அளித்துமே அன்பு செய்தார் - 2 - வல்ல

 

2.         பூரணமாய் செயல்தனிலே

            வளர்ந்து நாமே கிரியை செய்ய - 2

            கிருபையில் பெருகிட

            அருள்தனை தந்திடுவார் - 2 - வல்ல

 

3.         போதனையை பகுத்தறிந்து

            வேதத்தை நாமே அறிந்திடுவோம் - 2

            கிருபையில் ஸ்திரப்பட

            என்றுமாய் தாங்கிடுவார் - 2 - வல்ல

 

4.         துன்பங்களோ சோதனையோ

            சூழ்ந்திடினும் சோர்ந்திடாமல் - 2

            கிருபையே போதுமே

            சொந்தமாய் தாங்கிடுவார் - 2 - வல்ல

 

5.         நிர்மூலமாய் அழிந்திடாமல்

            நிலைத்து நாமே கனிதரவே - 2

            கிருபையே போதுமே

            என்றுமாய் அரவணைப்பார் - 2 - வல்ல

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அனுப்பும் தேவா உம் ஆசியோடு

பாடல் Youtube Link   Text file Download       அனுப்பும் தேவா உம் ஆசியோடு ஆசியோடு அகிலம் எங்கும் உம் பெ...