இருளிலே வெளிச்சமாய் வந்தவர் இவரே
இதயத்தின்
தீபமாய் இருப்பவர் இவரே
இதுவரை
கண்டதில் சிறந்தவர் இவரே
இனிமையின்
உருவமாய் பிறந்தவர் இவரே
முதலும்
முடிவுமாய் இருப்பவர் இவரே
என் வாழ்க்கையின்
அர்த்தம் இவரே ஓ ஓ
அவர்
சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி
விடிவெள்ளி
நட்சத்திரம் - என் இயேசு - 2
1. எளிமையாக
பிறந்தவரே, தாழ்மையாக வளர்ந்தவரே - (2)
தன்னைத்தான்
வெறுத்து, அடிமையின் ரூபம் எடுத்து,
தன் உயிரை
கொடுத்து, நம்மை சொந்தமாக்கினார் - 2 - அவர் சாரோனின்
2. காயங்களை
ஆற்றிடவே, இதயங்களை தேற்றிடவே - (2)
இவ்வுலகில்
வாழும் தம் மாந்தர்களுக்காக
ராஜாதி
ராஜாவாய் மீண்டும் வருகிறார் - 2 - அவர் சாரோனின்
- Stella Ramola & Daniel Davidson
No comments:
Post a Comment