நம்மை ரட்சிக்கவென்று நாடி - நாதன்


41.         செஞ்சுருட்டி            ஆதி தாளம் (252)

1.         நம்மை ரட்சிக்கவென்று நாடி - நாதன்
            மானிலத்தில் வந்தார் இங்கு தேடி - மோட்ச
            பாக்கியங்கள் ஆனந்தம் கோடி - இந்த
            மானிடர் மேலே அன்பு நீடி

2.         பெத்தலையில் பிள்ளையானாரென்று - வான
            ஜோதி வழி நடத்தச் சென்று - தூதர்
            மேய்ப்பர் சாஸ்திரிகளும் வந்து - இங்கு
            காணிக்கையோடவரைக் கண்ட

3.         சத்தியவேதத்தை ஆய்ந்து தேடும் - நம்
            நித்தியபரனை என்றும் நாடம் - தினம்
            சுத்திகரிக்க எமைச்சேரும் - தேவ
            சுத்த சுவிசேஷ சபை நீடும்

4.         வந்த நண்பர் யாவருமே களிக்க - நம்
            டக்கரம்மாள்புரம் சபையாரும் செழிக்க - தேவ
            காணிக்கை யாவையுமே படைக்க - என்றும்
            சத்ய சுவிசேஷ சபை செழிக்க

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு