15 May 2018

ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்


11           சங்கராபரணம்                                   ரூபக தாளம்

1.       ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
            கூதலடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ

2.         தந்தைக்கு தச்சு வேலை பாலா தாயும் எளியவளே
            இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு

3.         மூடத்துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே
            வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ

4.         வான் தூதர் தாராட்டை கேட்டமாமணியே உனக்கு
            நான் பாடும் தாராட்டு கேட்க நன்றாயிருக்கலையோ

5.         ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
            நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ

6.         இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்கவந்த
            செல்வமே நீரழுதால் ஏழைமாது நான் என்ன செய்வேன்

7.         அன்பற்றோர் தேசத்திலே அழுதால் யாரும் உருகுவாரோ
            இன்பமே ரஞ்சிதமே மகனே ஏங்கி அழா அரசே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...