126. இராகம்: சௌராஷ்டிரம் ஆதிதாளம்
பல்லவி
வருவார்
விழித்திருங்கள்;-இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்.
அனுபல்லவி
பெரியவர், சிறியவர், பேதையர்,
மேதையர்[1]
சருவர்க்கும்
நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட.
- வரு
சரணங்கள்
1. பேரிகையால்[2] அண்ட
பித்திகளும்[3] குலுங்க,
பேர் எக்காளத்
தொனியால் பேய்க் கணங்கள் கலங்க,
தாரணியோர் மலங்க[4], தமைப் பற்றினோர்களும்
சீர்நிறை தூதரும்
சேர்ந்து சூழ்ந்திலங்க. - வரு
2. வானம் மடமடென்க,
வையம் கிடுகிடென்க,
ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க,
மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க,
ஞான கானம் பாட நல்லோர் சபை தொடங்க. - வரு
3. துன்புற்றோர்க்கு
ஜீவ இன்பக் கனிகள் ஊட்ட
தொண்டு செய்ய அன்பர்க்கு
அண்டர்[5] முடிகள்
சூட்ட,
அன்பற்றோரை
நரகவன்புத் தீயில் வாட்ட,
அத்தனைச்[6] சேர்ந்தோரை நித்ய கதியில் கூட்ட - வரு
4. விசுவாசிகள் தமை
மெச்சிப் புகழுதற்கும்,
மேலா மோட்ச
தலத்தோர் சால மகிழுதற்கும்,
விசுவாச ஈனரை
வியவா திகழுதற்கும்,
விண்ணோர் குழாங்கள்
சூழ, அண்ணல் கிறிஸ்தரசர் - வரு
- தேவவரம் முன்ஷி
No comments:
Post a Comment