09 December 2025

வருவார் கிறிஸ்தேசு நாதர்தான்

வருவார் கிறிஸ்தேசு நாதர்தான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

125. இராகம்: காம்போதி                                 ஆதிதாளம் (419)

 

                             பல்லவி

 

          வருவார் கிறிஸ்தேசு நாதர்தான்; அன்று

          தருவார் அவரவர் பலன்தான் மெய்யாய்

 

                             அனுபல்லவி

 

            குருவாய், இரட்சிப்பின் அதிபதியாம், - யூதக்

            கோத்திர மனுச் சக்கரவர்த்தியாய், மெய்யாய் - வரு

 

                             சரணங்கள்

 

1.         பொய்யில்லை; அதி சீக்கிரத்தில்தான்,-அவர்

            புண்ணியர் மறுரூபமாகத்தான்,

            துய்யோரெழுப்பி யொன்றாய்ச் சேரத்தான், உலகின்

            துர்ச்சனரின்[1] கண்களும் காணத்தான், மெய்யாய் - வரு

 

2.         ஜெயங்கொள்ளுந் தாசனைக் கண்டெடுக்க, தமது

            சிம்மாசனம் அவனுக்குக் கொடுக்க;

            பயங்கொள்ள உலகைக் கோலாலொடுக்க, தமது

            பாதரட்சை அவன் காலில் தொடுக்க, மெய்யாய் - வரு

 

3.         உலகமுழுது மொன்றாயாள, சபை

            யொரு மந்தையாய்க் கூடி வாழ,

            அலகை[2] நரகில் வீழ்ந்து மாள, மூவுல

            கனைத்தும் வணங்கியபடி தொழவே, மெய்யாய் - வரு

 

4.         பசிதாகம், துக்கம் பறந்தோட, வென்ற

            பரிசுத்தர் புதுப்பாட்டுப் பாட,

            வசித்த துட்டர்[3] நரகில் வாட, இங்கே

            வறுமைப் பட்டோர் சுகங்கொண்டாட, மெய்யாய் - வரு

 

 

­- ஜே.சி. அருளப்பன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பாவிகள்

[2] அலகை

[3] பாவிகள்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...