வந்தார் நமக்காக தாழ்ந்தார் நம்மை மீட்க
வந்தார்
நமக்காக
தாழ்ந்தார் நம்மை மீட்க
தரணியில் மனுவாய் பிறந்தார்
பாவம் போக்கும் மருந்தாய் உதித்தார் -
2
1. இருள் போன்ற
துன்பம் எமைச் சூழும் போதும்
ஒளியென
உம்மருள் தாங்கியதே
பாதைகள்
அறியா தடுமாறும் போது
உம் கரம்
எம்மை நடத்தியதே
எங்கள் நெருக்கத்தில் நீரே
எம்மோடு என்றும் இருப்பவரே - 2 - வந்தார்
2. பாரங்கள்
சுமந்து தடுமாறும் மாந்தர்
வாழ்வினில்
அமைதி கண்டிடவே
குறைவுகள்
யாவும் நிறைவாக மாற
வல்லவர்
இயேசு வந்தாரே
நம்மை விடுவிக்கும் இறையே
நம்மை வாழ்விக்கும் வல்லவரே - 2 - வந்தார்
- Rev. C.N. Ravishankar
Comments
Post a Comment