வந்தருள் ஈசன் மனை காண்

வந்தருள் ஈசன் மனை காண்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

10. இராகம்: புன்னாகவராளி                   ரூபக சாப்புதாளம் (376)

 

                             பல்லவி

 

          வந்தருள், ஈசன் மனை காண்;மகிமை ஏகோவாவே, உனை

          வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெருவாழ்வே.

 

                             அனுபல்லவி

 

                      அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,

                        ஆதரவாய் ஆண்டு கொள்வாய், வேத பராபரன் குமாரா - வந்த

 

                             சரணங்கள்

 

1.         திருக்கருணை மொழியால் மனந்திருக்கறுக்கும் பொருட்டெழுந்து,

            தீய வினை மிதித் தழிப்பாய், தேவா பெருமானே

            பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க

            உருக்கமுடன் இரங்கும் ஐயா, உன் பதமே தஞ்சம் என்றாம்; - வந்த

 

2.         பஞ்சம் படை, நோவு, துன்பம், பயங்கரம், செய் பவ வினைக்கும்,

            கெஞ்சும் அடியாரைக் காப்பாய், கிறிஸ்தேசு நாதா,

            மஞ்சு திகழ் பரமண்டல வாழ்வை விடுத்தே உலகில்

            துஞ்சு சிறு பாலகனாகத் தோன்றி வரும் தேவ தேவே - வந்த

 

3.         பூவுலகை ஆளும் மன்னர், போதம் உணர் வேதியர் உன்

            பொன் பதத்தை அர்ச்சயிக்க நல பதம் தா, தேவே

            மூவுலகினில் துதியும், முக்யம் மகத்துவம் கனமும்,

            மா பலமுமே உமக்கே, மங்களம் உண்டாவதாக - வந்த

 

 

- காபிரியேல் உபதேசியார்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே