தேவசுதன் இயேசு பிறந்தாரே
தேவசுதன் இயேசு பிறந்தாரே
தேவ சிங்காசனம்
தான் துறந்தே
தேடித்
திரிந்து உதித்த இடம்
பெத்-ல-கேம்
யார் இவரோ? யார் இவரோ?
அநாதி தேவனின் ஏக சுதன் இவர்
அற்புத வார்த்தையாமே
1. தாழ்மையின்
மேன்மை தரித்தவராய்
ஏழ்மையின்
கோலம் எடுத்தவராய்
பார் உலகில்
ஜெனித்த இடமோ
பெத்-ல-கேம்
- யார் இவரோ?
2. இம்மானுவேலனாம்
இயேசு பரன்
என்றென்றும்
மாறாத நேசர் மீட்பர்
இன்ப கீதம்
சொல்ல ஏற்ற இடம்
பெத்-ல-கேம்
- யார் இவரோ?
Comments
Post a Comment