04 December 2025

வந்தாளும் இயேசுவே வாருமிதில்

வந்தாளும் இயேசுவே வாருமிதில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வந்தாளும் இயேசுவே வாருமிதில்

                        தேவ மைந்தர்கள் கூடு மிந்நேரமதில்

 

1.         பத்மூ தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே

            சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே

            இத் தினத்தில் இங்கு வந்திடும் - தேவா - வந்தாளும்

 

2.         நல் வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும்

            கல்வாரியின் அன்பை இன்று கர்த்தனே நீர் காட்டியே

            நற்குணம் அவர்க்கு நல்கிடும் - தேவா - வந்தாளும்

 

3.         சக்தியில்லை எங்களுக்குச் சாம்பலும் தூசியும்

            கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்

            புத்தியாக யுத்தம் செய்திட - தேவா - வந்தாளும்

 

4.         என்னை நோக்கி கூப்பிடில் அளித்திடுவேன் உத்திரம்

            பின்னும் நீ அறிந்திடா வல்லமைகள் காட்டுவேன்

            என்றவா இந்நேரம் வாருமேன் - தேவா - வந்தாளும்

 

5.         சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே

            சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்க்கொள்ளாதென்றீர்

            ஆதலால் அனந்தம் ஸ்தோத்திரம் - தேவா - வந்தாளும்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...