வந்தாரே ஆவி சீஷர்கள் மேலே

வந்தாரே ஆவி சீஷர்கள் மேலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

140. இராகம்: நாதநாமக்கிரியை                      ஆதிதாளம்

 

                             பல்லவி

 

                   வந்தாரே ஆவி;சீஷர்கள் மேலே

                   வந்தாரே ஆவி

 

                             அனுபல்லவி

 

            வந்தனர், அக்கினிச் சுந்தர நாவென

            நிந்தை அடைந்துளம் நொந்தவர் மேலே! - வந்

 

                             சரணங்கள்

 

1.         எல்லாரும் ஒருமனம் அல்லாது, வேறில்லாமல்,

            சொல்லாமல் வீடுவிட்டு, புல்லர்கள்[1] தமக்கஞ்சி,

            வல்லவனான ஏசு நல் அடியை வணங்கி

            அல்லும் பகலும் ஏற்றும் மெல்லிய சீஷர் மேலே - வந்

 

2.         அண்டம் அகன்று, பூ மண்டலந்தனில் ஆவி

            எண்டிசையும் முழக்கம் கொண்டிடவே, பலத்த

            சண்டமாருதம்[2] போலக் கண்டவர் பிரமிக்க

            தொண்டர் இருந்த வீட்டை மண்டல்செய்து நிரப்பி - வந்

 

3.         கூடிய ஜனங்களும் நாடி-கலிலேயர்

            தேடிப் பிடிக்கினும் ஓடி ஒளிப்பவர்

            பாடி, எம்பாஷையிலே நீடிய பிரசங்கம்

            சூடியதேதென, சாடி அதிசயிக்க - வந்

 

- ஆபிரகாம் உபதேசியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பகைவர்கள்

[2] பெருங்காற்று

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே