வந்தானே தந்தை பிதாவின் சுந்தர மைந்தனே

வந்தானே தந்தை பிதாவின் சுந்தர மைந்தனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

124. இராகம்: காப்பி                                       ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          வந்தானே, தந்தை பிதாவின் சுந்தர மைந்தனே,

 

                             அனுபல்லவி

 

            அந்தமாய்[1] உருவம்கொண்டு, அன்புடன் சீயோனைக் கண்டு

            விந்தையில் சல்லாபம்[2] விண்டு, மீண்டிரட்சித்தாளவென்று - வந்

 

                             சரணங்கள்

 

1.         அங்கியும் மார்பருகில் பொற்கச்சையும் கட்டி

            அட்சய[3] தேவ த்ரவிய ஆரணம்[4] கிட்டி,

            துங்கமாய்க்[5] கரத்தில் வான ராச்சிய செய்கோலை நீட்டி,

            ஜோதிப் பிரகாச ஜீவ ரத்ன கிரீடம் சூட்டி - வந்

 

2.         அக்கினி கொழுந்தடைவாய்க் கண்கள் எரிக்க

            ஆதித்தன்[6] எனவே மக ப்ரபை விரிக்க,

            மிக்க சிரத்தின் ரோமம் பஞ்சினும் வெண்மை தெரிக்க,

            மேன்மையில் எக்காளங் கொண்டேழு தூதர் ஆர்ப்பரிக்க, - வந்

 

3.         காயும் சொகு சாவுக் கொத்த கால்கள் இலங்க,

            கரத்தினிலே ஏழு நட்சத்திரங்கள் அலங்க[7]

            வாயிலிருந் திருபுறமும் கூர்மைப்பட்டயம் துலங்க,

            வாரிதி[8] ஜலத் தொனியின் வார்த்தையால் அண்டம் குலுங்க - வந்

 

 

- வேதநாயக சாஸ்திரியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] அழகாய்

[2] இன்மொழிகள்

[3] குறைவற்ற

[4] வேதம்

[5] தூய

[6] சூரியன்

[7] ஒளிர

[8] கடல்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே