மண்ணுலக மீட்டிடவே
மண்ணுலக மீட்டிடவே
மரியாவின்
மகனாக வந்தவரே - (2)
ஏழைகளின்
துயர் நீக்க
எளிமையாய்
குடிலில் பிறந்தவரே - (2)
ஆடிப்பாடி
கொண்டாடுவோம்
பாலன்
பிறந்த இந்நாளிலே - 2
Happy
Christmas Merry Christmas
Wish
you a happy happy Christmas - 2
1. பாலன் வந்த
இந்நாளிலே
உலகெங்கும்
நற்செய்தி கொண்டாட்டமே
வானதூதர்
வாழ்த்து பாட
குதுகல
கொண்டாட்ட ஆரம்பமே
மனசுக்குள்ள
கவலையெல்லாம் மெல்ல மெல்ல மறையுதையா - (2)
வானம்
விட்டு பூமியில
வாழவந்த
சாமி
வாடுகிற
மக்கள் குறை தீர்த்து வைப்பாரே
பாவங்களை
போக்கி நல்ல வாழ்வு தரும் சாமி
பூமியில
நமக்காக பிறந்துவிட்டாரே - 2 - ஆடிப்பாடி
2. வார்த்தை
இன்று மெய்யானதே
வானுலக
தேவன் இங்கு வந்துவிட்டாரே
தேவன்
தந்த பேரொளியே
தேடி வந்து
நம்மோடு சேர்ந்துவிட்டாரே
மகிழ்ச்சி வெள்ளம் நம்மள சுத்தி
மழை போல பொழியுதையா - 2
நல்வாக்கு
தந்து நம்மை வாழ வைக்கும் சாமி
நம்மை
போல மண்ணில் வந்து பிறந்து விட்டாரே
அமைதியோடு
ஆள வந்த
அன்பர்
இயேசு சாமி
அன்போடு
நம்மை மீட்க வந்துவிட்டாரே - (2) - மண்ணுலக
- DENNIS MARTIN
Comments
Post a Comment