உங்க உசுர கொடுத்து உலகை காக்க
உங்க உசுர கொடுத்து
உலகை காக்க
மனிதனாய்
பிறந்தீர்
தாழ்மையான
என்னை உயர்த்திடவே
ஏழ்மையாய் உதித்தீர் - 2
உங்க பாசத்தாலே பாவி என்னை
பரிசுத்தனாக்கினீர்
உங்க நேசத்தாலே
நொந்த இதயத்தை
ஆற்றி
தேற்றினீர்
தேவ
பாலா நன்றி! இயேசு பாலா நன்றி!
யூத
ராஜா நன்றி! எங்க அதிபதியே நன்றி! - 2
1. உங்க தாழ்மைய உலகம் தெரிஞ்சிக்கதான்
பூமி வந்திங்க
உங்க பாசத்த நாங்க புரிஞ்சிக்கதான்
தேடி வந்தீங்க - 2
உங்க அன்ப நாங்க அறிஞ்சிக்கதான்
சிசுவாய் பொறந்தீங்க
உங்கள
போல எங்கள மாத்த சிறுமையாய் வந்தீங்க
இது எல்லோருக்கும்
நல்ல செய்தி!
பரலோகம்
சேர்க்கும் சிறந்த செய்தி! - 2
2. தகுதியில்லா
எங்கள நீங்க தேடி வந்தீங்க
தூரமாய்
போன எங்களையும் நெருங்கி வந்தீங்க - 2
இரட்சிப்பின்
வாழ்வதனை பெற்றிட செய்தீங்க
நீதியின்
வாழ்வதனை வாழ்ந்திட செய்தீங்க
உம்மில்
நிலைத்திருக்க செய்திடுங்க
நித்திய
வாழ்வை தந்திடுங்க - 2 - உங்க உசுர
- Alex Jacob
Comments
Post a Comment