வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
நீர் வந்திடுவீர்
இயேசு அழைக்கின்றாரே - 2
வந்திடுவீர் வந்திடுவீர்
வாழ
வைக்கும் நம் இயேசுவிடம் - (2) - வருத்தப்பட்டு
1. வறண்டு
போன உந்தன் வாழ்க்கைதனை
வற்றாத
நீரூற்றாய் மாற்றிடுவார் - 2
லீலி புஷ்பம்
போல மலர்ந்திடுவாய்;
லீபனோனைப் போல வேரூன்றுவாய் - (2) - வந்திடுவீர்
2. வானத்தின்
பனியை கொடுத்திடுவார்
பூமியின்
கொழுமையை தந்திடுவார் - 2
கன்மலையின்
தேனை புசிக்கச் செய்வார்
கொழுத்த
கன்றாக வளரச் செய்வார் - (2) - வந்திடுவீர்
3. கசந்துபோன உந்தன் வாழ்க்கைதனை
கனிதரும்
வாழ்க்கையாய் மாற்றிடுவார்; - 2
ஏலிமை போல செழிக்க செய்வார்
எந்நாளும்
வாழ்ந்து சுகித்திருப்பாய் - (2) - வந்திடுவீர்
- Pastor. David
Comments
Post a Comment