சமத்துவ நாதனே இயேசு என் ராஜனே
சமத்துவ நாதனே இயேசு என் ராஜனே
கேள்விகளைக்
கேட்கச் சொன்ன தோழனே
காலத்தை
வென்ற அதி ரூபனே - (2) - சமத்துவ
1. பெண் அடிமை
நிலைக்கெதிராய்
கல்லெறி
என்றவரே
உரிமையை
மீட்டெடுக்க
ஒன்றிணைய
சொன்னவரே - 2
மூடரை
அழிப்பதற்கு - (2)
சாட்டையை
எடுத்தவரே
அறியாமை
இருள் அகல
நெருப்பாய்
வந்தவரே - 2 - சமத்துவ
2. வேற்றுமையின்
வேரறுக்க
வேள்வி
பல செய்தவரே
சரித்திர
ஆணவத்தை
அலட்சியம்
செய்தவரே - 2
வீழ்ந்தவர்
வாழ்வுயர - (2)
மனுருவாய்
வந்தவனே
மானுடத்தின்
மாண்புயர
தன்னுயிரைத்
தந்தவரே - 2 - சமத்துவ
- Jeyachandran. C
Comments
Post a Comment