சிலிர்க்கும் சில்லென குளிரினில் இயேசு பிறந்திட்டார்

சிலிர்க்கும் சில்லென குளிரினில் இயேசு பிறந்திட்டார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       சிலிர்க்கும் சில்லென குளிரினில் இயேசு பிறந்திட்டார்

            விழிகள் விரித்து தரிசித்தார் நேசர் உதித்திட்டார்

            இங்கித சங்கீத பாடல் ஒன்று தூதர் இசைத்திட்டார்

            கின்னர விண்ணர இசையொன்று வானில் ஒலித்திட்டார்

 

                        பாடி பறக்கும் குயில்களும்

                        ஆடி திரியும் மயில்களும்

                        சாய்ந்து அசையும் மலர்களும்

                        வாழ்த்த வந்தனரே

 

                        சீராட்டி பாராட்டி ஞானியும் வாழ்த்தி சென்றனரே - (2)

 

2.         வெண்பனி பொழியும் இரவினில் மாட்டுத் தொழுவினில்

            கண்மணி பாலகன் துயில்கிறார் ஆயர் குடிலினில்

            மின்னிடும் வான் வெள்ளி ஒளி கீற்றாய் இருளின் வழியினில்

            சொல்லிடும் நற்செய்தி சமாதானம் மகிமை பூவினில் - பாடி

 

3.         மானிடர் இருளை நீக்கிடவே அன்னை மகவானார்

            வானுயர் மகிமை துறந்தாரே ஏழை கோலமதாய்

            வானவர் மானுட உருவானார் அன்பின் ஜோதியாய்

            காண்பவர் மீட்பினை புரிந்திட வாழ்த்தி பாடிடுவோம் - பாடி

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே