யெகோவாநிசி யெகோவா ஷாலோம்

யெகோவாநிசி யெகோவா ஷாலோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

யெகோவாநிசி யெகோவா ஷாலோம்

யுத்தத்தில் ஜெயக் கொடியானவர்

உலகம் மாமிசம் பிசாசு யாவையும்

ஜெயித்தாரே கல்வாரியில்

 

ஜெய ஜெய வேந்தனாய் சேனை அதிபதியாய்

எந்தன் நேசர் இயேசு வந்திடுவார்

அல்லேலூயா ஓசன்னா யூதராஜ சிங்கமே

துதி கனம் மகிமை என்றென்றும்

 

1. சர்ப்பங்கள் தேள்கள் மதித்திடவே

சாத்தானின் சதி அழித்திடவே

சிங்கம் மேல் நடந்து சர்ப்பங்கள் அழிந்திடும்

அதிகாரம் தந்திட்டாரே

 

2. சோதனை போராட்டம் வந்தாலும்

சோர்ந்து போகா நேசர் உண்டல்லோ

வழக்காடிடுவார் யுத்தம் செய்திடுவார்

வெற்றி மேல் நான் வெற்றி பெறுவேன்

 

3. ஜெயங் கொண்ட தேவகுமாரன்

விண்ணொளி வீசும் பிதா அருகில்

சிங்காசனம் மீது வீற்றிருக்கவே

அழைக்கிறார் சத்தம் கேளாயோ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே