வருக வருக அருள் வள்ளலே வருக
வருக! வருக! வருக! வருக!
1. வருக வருக அருள் வள்ளலே வருக,
திருமறை
தரும் அதி தேவனே வருக - 2
குருசினிலே
உயிர் கொடுத்தவர் வருக,
இருளறவே
ஒளிர் ஏசுவே வருக! - வருக
2. மறுபடி
வருகிற மன்னவன் வருக,
மன்னிய
திருச்சபை மகிழ்ந்திட வருக - 2
இறுதியிலே
பலர் உயிர்த்தெழுந்திடவே,
ஏசுவே
மெய்யொளி என்பது மிகவே! - வருக
3. புதிய
வானம் புது பூமியும் வருக,
பொலிவுடனே
புது எருசலை வருக - 2
துதி
மிகுந்தபடி திரு இறையரசு
துணிகரமாய்
அதி விரைவினில் வருக! - வருக
- பொ.ஆ. சத்தியசாட்சி
Comments
Post a Comment