விண்ணை விட்டு மண்ணில் வந்த

விண்ணை விட்டு மண்ணில் வந்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விண்ணை விட்டு மண்ணில் வந்த

            எங்கள் தெய்வம் பிறந்தாரையா

            எங்கள் பாவம் போக்க வந்த

            மண்ணின் மைந்தன் அவர் தானையா!

 

                        அவரைப் போல எவருமில்ல நானும் எங்கும் பார்த்ததில்லை - 2

 

                நல்லவரு! நன்மை செய்பவரு! என்றும் உள்ளவரு எங்கள் இயேசையா

                        நல்லவரு! நன்மை செய்பவரு! என்றும் உள்ளவரு நீங்க தானையா!

 

1.         பூமியில் வந்தாரு! அன்பை விதைச்சாரு!

            பகையை சிலுவையினால் கொன்று விட்டாரு

            தாழ்மையின் ரூபமாய் தன்னையே தந்தாரு!

            எல்லா நாமத்திற்கும் மேலாய் நீன்றாரு!

 

                        இருள் நீக்கும் வெளிச்சம் நீரே!

                        என்னை மாற்ற வந்தவர் நீரே! - 2 - நல்லவரு

 

                        (எனக்குள்ள வந்தாரு அற்புதங்கள் செய்தாரு

                        என்னையும் அவரைப்போல் மாற்றி விட்டாரு)

 

2.         நன்மை செய்பவராய் சுற்றி வந்தாரு!

            நம்பிடும் யாவருக்கும் நல்லத செஞ்சாரு!

            இழந்ததை மீட்டிடவே மனிதனாய் வந்தாரு!

            நித்திய வாழ்வுதனை நமக்குத் தாந்தாரு!

 

                        குணமாக்கும் மருத்துவர் நீரே!

                        குறை நீக்கும் மகிமையும் நீரே! - 2 - நல்லவரு

 

 

- Pas. Lawrence (DK Ministries)

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே