தேன் சிந்தும் இரவு வெண் ஒளியாக தோன்ற
தேன் சிந்தும் இரவு வெண் ஒளியாக தோன்ற
மகவாக புவி மீது பாலன்
விண்மீன்கள்
கூட்டம் நடுவானில் மின்னும்
உதித்தாரே
புல் குடிலில் இயேசு - 2
ஜெனித்தாரே பெத்லகேமில் கந்தை கோலமாய்
மகிழ்ச்சியின் இராகம் எங்கும் பாரில் ஒலிக்கவே
வானவர் வாழ்த்திட கோனவர் மகிழ்ந்திட
பனித்துளியும் பொழியும் இரவில் பெத்லகேமிலே - 2
1. மார்கழி
மாதம் (குளிரில்) கடுங்குளிர் நேரம் (இரவில்)
வீணை மீட்டி
இனிய கீதம் இசைக்க
சின்னச்
சின்னக் குயில்கள் நடனங்கள் ஆட
மீட்பர்
இயேசு குழந்தையாகத் தோன்ற - 2 - ஜெனித்தாரே
2. வண்ண வண்ண
பூக்கள் (அழகாய்) மெல்ல மெல்ல பூக்க (மணமாய்)
பூக்களாக பூத்துக் குலுங்கும் காலம்
பறவைகள்
கூட்டம் பறந்திடும் நேரம்
கிறிஸ்மஸ்
செய்தி மேளதாளம் முழங்க - 2
ஞானியர்
மூவராய் புல்லணையிலே
பொன்
போளம் தூபம் என்னும் காணிக்கைகளால்
அளித்தனரே பாலன் முன்
வணங்கினரே தாழ்மையாய்
அவ்விருட்டு சூழ்ந்த நேரம் முன்னணையிலே - தேன் சிந்தும்
- V. Stalin Jeba
Singh
Comments
Post a Comment