இயேசு பிறந்தாரே சந்தோஷம் தந்தாரே
இயேசு
பிறந்தாரே சந்தோஷம் தந்தாரே
மகிழ்ச்சி என் உள்ளம் பொங்குதே - 2
1. மா பாவியாம்
என்னை மீட்கவே
மன்னவர்
மனுவானாரே
என் குறைவெல்லாம்
நிறைவாக்கவே
புது வாழ்வு
என்னில் தந்தாரே
பாடி
கொண்டாடி நான் பறைசாற்றுவேன்
இயேசு
என் வாழ்வில் வந்தார் - இயேசு
2. தூதர் சேனை
ஆர்ப்பரிக்க
மேய்ப்பர்
கூட்டம் அகமகிழ - 2
விண்விட்டு
மண்ணில் வந்தார்
மாட்டு
தொழுவத்தில் மகாராஜனே
மண்ணான
எனக்காகவே
விலை கொடுத்தாரே
அவர் வாழ்வையே
என் வாழ்வை
வளமாக்கவே
பாடி
கொண்டாடி நான் பறைசாற்றுவேன்
இயேசு
என் வாழ்வில் வந்தார் - இயேசு
3. பாவத்தின்
வேர் அறுத்திடவே
சாத்தானின்
தலையை நசுக்கிடவே
இப்புவி
வந்தார் பரிசுத்தரே
தம் உதிரத்தை
சிந்தினாரே நான் பரிசுத்தமாகிடவே
என்னை
அவர் சொந்தமாக்கினாரே
நான் வெற்றி
சிறந்திடவே
பாடி
கொண்டாடி நான் பறைசாற்றுவேன்
இயேசு
என் வாழ்வில் வந்தார் - இயேசு
- Johney Stephen
Comments
Post a Comment