வண்ண வண்ண பூக்கள் பூக்கும் செடி நீ
வண்ண வண்ண பூக்கள் பூக்கும் செடி நீ
நல்ல நல்ல கனிகள் கொடுக்கும்
மரம் நீ
இயேசுவின் அன்பு உன்னில் இருக்க
உலகின் ஒளியாய் உதித்திடுவாய்
1) தந்தையின் உறவு மறைந்தே போகும்
தாயின் அன்பு கரைந்தே
போகும்
கர்த்தரின் உறவில் நிலைத்திருந்தாலே
உள்ளத்தில் மகிழ்ச்சி என்றுமுண்டு - வண்ண
2) நண்பன் உன்னை கைவிட்ட போது
உற்றார் உன்னை வெறுத்திட்ட
போது
இயேசுவின் உறவில் நிலைத்திருந்தாலே
கவலைகள் மறந்து வாழ்ந்திடலாம்
- வண்ண
3) காக்கைகள் கூடி உணவை உண்ணும்
உறவின் வலிமை அதிலே தெரியும்
நீயும் பிறருக்கு கொடுத்திடுவாய்
இயேசுவின் உறவில் நிலைத்திடுவாய்
- வண்ண
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment