வசனமே எங்கள் பட்டயம்

வசனமே எங்கள் பட்டயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வசனமே எங்கள் பட்டயம்

                   இயேசு நாமமே எங்கள் அடைக்கலம் - 2

                        அச்சமே இல்லையே எங்கள் உள்ளத்தில்

                        தோல்வியே இல்லையே எங்கள் வாழ்க்கையில் - 2

 

1.         சாத்தான் கூட்டம் எதிர்த்து வருகையில்

            சாத்ராக் போல நிமிர்ந்து நிற்கிறோம் - 2

            எரியும் சூளை நெருப்பிலும் எங்களுடன் உலாவிடும்

            உயிர்த்தெழுந்த இயேசு இருப்பதால் - 2 - வசனமே

 

2.         கொக்கரிக்கும் கோலியாத்தினை

            கூலாங் கல்லைக் கொண்டு மேற்கொள்ளுவோம் - 2

            இயேசு என்னும் நாமமே எங்கள் உண்மை ஆயுதம்

            தூய ஆவி எங்கள் பட்டயம் - 2 - வசனமே

 

3.         கைகள் காலில் விலங்கு ஏறினும்

            பவுலைப் போல துதித்துப் பாடுவோம் - 2

            அஸ்திபாரம் தகர்ந்திடும் கர்த்தர் நமது வலப்புறம்

            நிற்பதாலே எதையும் சந்திப்போம் - 2 - வசனமே

 

4.         வானம் பூமி படைத்த தேவனே

            எங்கள் வலப்புறத்தில் என்றும் நிற்கிறார் - 2

            சூழ நின்று காக்கிறார் குறைகள் யாவும் போக்கினார்

            என்றும் எங்கள் நிழலாய் நிற்கிறார் - 2 - வசனமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே