பாவம் நிறைந்த உலகத்திற்கே
பாவம்
நிறைந்த உலகத்திற்கே
பரமன்
இயேசு வந்தாராம்
கன்னி
மைந்தனாய் கருணை
தேவனாய்
இன்ப
பாலனாய் பிறந்தாராம்
- பாவம்
1. ஏழைக்கோலம்
எடுத்தாராம்
தாழ்மை
உருவாய் வளர்ந்தாராம்
- 2
நன்மைகள்
செய்து நல்லவை
கூறி
நல்லவராக
வாழ்ந்தாராம்
- (2) - பாவம்
2. நோய்கள்
நீங்கிடச்
செய்தாராம்
பேய்கள்
ஓடிட மகிழ்ந்தாராம்
- 2
மரித்தவர்
சிலரை உயிர் பெறச்செய்து
மக்களின்
மனதில் நிலைத்தாராம்
- (2) - பாவம்
3. பாரின்
பாவம் போக்கிடவே
மரித்து
மூன்றினில்
உயிர்த்தாராம்
- 2
விண்ணக
வாழ்வு மானிடர்
காண
மன்னவன்
வழியாய் அமைந்தாராம்
- (2) - பாவம்
- Kadayanodai
I. Packianthan
Comments
Post a Comment