தேவாதி தேவ தேவன் பூமியில் பிறந்தார்
தேவாதி
தேவ தேவன் பூமியில்
பிறந்தார்
ராஜாதி
ராஜராஜன்
குடிலில் பிறந்தார்
- 2
மன்னவர்
இயேசு மகிமை துறந்தார்
என்னுயிர்
மீட்க மண்ணில்
தவழ்ந்தார் - 2 - தேவாதி
1. அழியும்
உலகை மீட்டுக்கொள்ள
பொழியும்
பனியில் பாலனாக
- 2
குடிலிலே,
ஏழை வடிவிலே
மனு
உருவிலே, வந்த
மகிபனே - 2 - தேவாதி
2. மறையும்
வாழ்வு மகிமை அடைய
எரியும்
ஒளியின் தீபமாக
- 2
இறைவனே,
திருமறைவனே
அருள்
உறைவனே, வந்த
சுகிர்தனே
- 2 - தேவாதி
3. கறையும்
திறையும்
அற்றுப் போக
இறையின் சாயல்
பற்றிக் கொள்ள
- 2
சிலுவையில்,
சிந்தும் உதிரத்தில்
அன்பை
அளித்திட, வந்த
மீட்பரே - 2 - தேவாதி
- Pas. John Mani Varman
Comments
Post a Comment