யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
488.
பல்லவி
யோர்தான் நதியோரம்
திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே.
சரணங்கள்
1. வெள்ளம்
பெருகினும் வல்லமை குன்றாதே;
வல்லவன்
வாக்கொன்றும் மாறிப் போகாதே - யோர்
2. வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவன் யேசு தம் வாக்கு மாறாரே - யோர்
3. உன்னத
மன்னன் உண்டு முன்னணியில்;
துன்பமணுகாமல் துணையருள்வாரே - யோர்
4. கானானினோரமே காதலன் நாடதே
காணுவன் தேசம் ஆ என்ன இன்பமே - யோர்
Comments
Post a Comment