01 December 2025

யெஷுவா யெஷுவா என்ற நாமம்

யெஷுவா யெஷுவா என்ற நாமம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

யெஷுவா யெஷுவா என்ற நாமம்

உனக்கும் எனக்கும் போதும் போதும்

இனிமையான நாமம்-ஒரு

இணையில்லாத நாமம்

முழங்கால்கள் முடங்கிடும் நாவுகள்

சொல்லிடும் அனைவரும் தொழுதிடும்

 

1. நீதியின் சூரியனே நீரே நாயகனே

ஏழையின் காவலனே யெஷுவா யெஷுவா

பரமனின் பிள்ளைகளை காணவே

சிலுவையில் மரித்தவரே

உயிரோடு எழுந்தவர் ஆதலால்

மரணத்தை ஜெயித்தவரே

 

2. கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே

மூன்றில் ஒன்றானவரே யெஷுவா யெஷுவா

பாரங்களை சுமந்திடும் சிநேகிதன்

பரமனின் தவ புதல்வன்

பாவங்களை அகற்றிடும் நாயகனே

மகிமையிலே முதல்வன்

 

3. ஆதியில் இருந்தவரே

ஆவியில் நிறைந்தவரே

ஆத்தும இரட்சகரே யெஷுவா யெஷுவா

ஒப்புரவை உண்டு பண்ணும்

வேலையை திப்புரவாய் முடித்தவரே

முன் குறிக்கப்பட்ட வரை மீட்கவே

ஜீவனை கொடுத்தவரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...