யேகோவா தேவன் உன்னோடு இருப்பார்
யேகோவா தேவன் உன்னோடு இருப்பார்
கலங்காதே நீ பயப்படாதே
பெரிய பர்வதம் நீ எம்மாத்திரம்
தேவ பிள்ளை முன் சம பூமியாவாய்
எரிகோ மதில்கள் எதிரே நின்றாலும்
துதியின் சத்தத்தால் தகர்ந்தே போகும்
1. கர்த்தர் செய்ய நினைத்தவைகள்
ஒருபோதும் இனி தடைபடாது
சாத்தானின் சதிகள் எதிரே நின்றாலும்
தேவ பலத்தால் முறிந்தே போகும்
2. யோர்தான் வெள்ளம் புரண்டு வந்தாலும்
செங்கடல் உன்னை வழி மறித்தாலும்
சேனை அதிபன் உனக்கு முன் நடப்பார்
சேதமின்றி உன்னை காத்திடுவார்
Comments
Post a Comment